வணக்கம் தமிழ்த்தாய் உறவுகளே, காட்டிக்கொடுப்பவர்களாலும், கூட்டிக்கொடுப்பவர்களாலும் எமது இனம் அடையும் துன்பத்துக்கும் எங்கள் போராட்டம் அடையும் பின்னடைவுக்கும் அளவே இல்லை. இப்படியான இந்த சூழ்நிலையில் எங்கள் மனங்களை நோகடிக்கும் வேதனைக்குரிய செய்திகளை பிரசுரிக்கும்போது சரியான முறையில் உறுதிப்படுத்திய பின் வெளியிடவும்.
ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் ! பிரசுரித்த திகதி : 11 Mar 2009 பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் "வணங்கா மண்" எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது.
இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேஷன் "வணங்கா மண்" என பெயரிடப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என்பன பூர்த்தியாகியுள்ள நிலையில் இக்கப்பலில் கொண்டு செல்ல உலர் உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் புலம் பெயர் பிரித்தானியர்களிடம் கோரி நிற்கின்றனர்.
பிரித்தானியாவின் பல பாகங்களில் உணவு சேமிப்பு நிலையங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு உலர் உணவுப்பொருட்களை மக்கள் சென்று வழங்கமுடியும். உடைகள் மற்றும் இலங்கைத் தயாரிப்பான உணவு வகைகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலை நிவாரண கப்பல் என்று கூறாது "வணங்கா மண்" என பெயரிட்டதன் காரணம், உலகநாடுகளால் புறக்கணிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் கொடூரமான எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதலுக்கு உள்ளாகி, மிகமோசமான உணவு தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தும், சிங்கள இனவாதிகளுக்கு தலைவணங்காது நிற்கும் எம் தமிழ் மக்களுக்காக எம்மவர்களால் அனுப்பப்படும் கப்பல் என்பதாலாகும்.
புலம் பெயர் வாழ் தமிழர்களே! விரைந்து செயல்பட்டு உணவுகளை வழங்குங்கள். இந்த கப்பலை வெற்றியாக முல்லை துறைமுகத்திற்கு கொண்டுசெல்ல ஏற்பாட்டாளர்களோடு தோளோடு தோள் நின்று உதவுங்கள், என அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.
இச் சந்தர்ப்பத்தை தவறவிடின் இனி எச் சந்தர்ப்பத்தில் நாம் வன்னி மக்களை காக்கப் போகிறோம்...!
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழீழத்திலிருந்து தன்மானத் தமிழன் எழுதுவது
வணக்கம்
தமிழீழத் தமிழரான நாங்கள் தாயகத்தில் படும் துயரம் சொல்லில் அடங்காதவை. என்பதை நீங்கள் அறியாதவை அல்ல. எமது துயரம் முழுஉலகமும் அறியும் எனினும் நாங்கள் தன்மானத்துடன் வாழ விரும்புகின்றோம் என்பதை நான் உங்களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றேன்.
“மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததென்பர்” இம்மொழி எமக்கு சாலவும் பொருந்தும். ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன் நீங்கள் தெரிவித்த கருத்தாகும். தமிழீழ தேசிய தலைவரையும் தளபதிகளையும் நீங்கள் விமர்சித்த விதம் எமக்குப் பலத்த ஏமாற்றத்தையும் வேதனையையும் தந்தது. தமிழீழ தேசிய தலைவரை சர்வாதிகாரி என நீங்கள் குறிப்பிட்டது தமிழீழத் தமிழரான எம்மை மிகவும் ஏமாற்றமடையச் செய்துவிட்டது. தமிழினப் படுகொலை செய்யும் மஹிந்த ராஜபக்ச உங்களுக்கு சர்வாதிகாரியாகத் தெரியவில்லையா?
நான் உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். எமது இன விடிவுக்காய் போராடும் புலிவீரர்களும் தமிழர்கள் என்பதை மறவாதீர்கள். அவர்கள் வேறு எவருக்காகவும் போராடவில்லை. எமக்காகவும் எமது சுதந்திரத்திற்காகவுமே போராடுகிறார்கள். அவர்கள் வேறு நாம வேறு என்ற எண்ணத்திற்கே இடமில்லை. ஆயிரமாயிரம் வேங்கைகள் உயிர்த்தியாகம் செய்தது எமது இன விடுதலை மூச்சுக்காகவேயன்றி எந்தவொரு தனிநபருடைய சுயநல அரசியலுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ அல்ல. இப்படிப்பட்ட மாவீரச் செல்வங்களை இழிவுபடுத்தி எவர் பேசினாலும் பேசுபவர்கள்தான் இழிவானவர்களும் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களுமேயன்றி வேறெவருமல்லர். இவ்வகையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கதும் அருவருக்கத்தக்கதுமாகும்.
தயவுசெய்து தமிழீழ விடுதலைப்புலிகளை இவ்வாறு மானபங்கப்படுத்துவதை தவிர்க்கவும். இல்லாவிடில் எதிர்காலத்தில் தமிழர்களின் காவல் தெய்வம் என கூறிக்கொள்ளும் உங்களை உலகத் தமிழர்கள் தூற்றுவதை எவராலும் தவிர்க்க முடியாது.
ஒன்றை நினைவில் வைத்திருங்கள் சிங்களத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை.
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............/
எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது ,
முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று
அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில்
தமிழன் விழ விழ எழுவான் என்று
கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் ,
நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள்
,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம்
"என்றும் நாம் வீழ மாடோமேன்று "
உரத்து சொல்லுங்கள். அது
காலத்தின் தேவை என்று ".
ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து
தான் வாரிக்கொண்டு போனது , ஏன்
இது நம் தலைவனின் உள்நோக்கிய
இழுப்பாக இருக்க கூடாது ?
பிடிப்பார் பிடிப்பார் எப்படி?
மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.
இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று
கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்
வன்னி நிலம் ஒரு வரலாறு எழுதும்
தாயகத்தில் எமது மக்கள் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் எந்தவொரு பாகுபாடும் பாராமல் ஒற்றுமையாக ஒன்றிணைந்த சக்தியாக குரல் எழுப்ப வாரீர் என ஐக்கிய இராச்சியத்திற்கான தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 17.01.09 அன்று பிற்பகல் 3:00 மணி தொடக்கம் 7:00 மணி வரை பிரித்தானிய பிரதமரின் பணியகமான No. 10 Downing Street க்கு முன்பாக இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கான தமிழ் இளையோர் அமைப்பு 15.01.09 தொடக்கம் 18.01.09 வரை தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.S